தனிநபர் உலக சாதனையில் ஈடுபட்டுள்ள கோவை சகோதரர்கள் : குவியும் வாழ்த்துக்கள்

கோவையில் தனிநபர் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள சகோதரர்கள் இருவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன


கோவையில் தனிநபர் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள சகோதரர்கள் இருவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 



கோவை தெலுங்குபாளையம் பகுதியில் வசித்து வரும் ரவிசங்கர், சங்கீதா தம்பதியினரின் மகன்கள் ப்ரனவ் (14), ப்ரித்திவ் (10). இவர்கள் இருவரும் தங்களது தனி திறமைகளில் மூன்று உலக சாதனையை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வைசியாள் வீதியில் உள்ள வாசவி கலையரங்கில், உலகிலேயே அதிகநேரம் தொடர்ந்து விரிவுரையாற்றும் நிகழ்ச்சியை  மாணவன் ப்ரனவ் இன்று காலை முதல் துவக்கியுள்ளார். சாதனை விதிகளின்படி, 14 மணி நேரம் தொடர்ந்து பாடம் கற்பிக்கப்பட்டால் அது உலக சாதனையாக அங்கீகரிக்கப்படும். சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் உள்ள பதினாறு அத்தியாயங்களில், ஆறு அத்தியாயங்களை முழுமையாகப் படித்து இந்த உரையைத் துவக்கியுள்ளார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.40 மணியளவில் தனது விரிவுரையை நிறைவு செய்து சாதனைப் படைக்க உள்ளார். 



இரண்டாவது நிகழ்வாக நாளை மதியம் ஒரு மணி முதல் தொடர்ந்து 4 மணி நேரம் மிருதங்கம் வாசிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளார். இதன்மூலம், உலகிலேயே அதிக நேரம் தொடர்ந்து மிருதங்கம் வாசித்தவர் (மைனர்-ஆண்) என்ற சாதனையையும் அவர் நிகழ்த்த உள்ளார். இதேபோல, இவரது, சகோதரர் ப்ரித்திவ், 'மரங்களைக் காப்போம்' என்ற தலைப்பில் 9 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான பென்சில் பாக்ஸ் கொண்டு 36 சதுர மீட்டர் அளவிலான ஓவியத்தை வரைந்து வருகிறார். இதற்கு, காலக்கெடு எதுவும் இல்லாத நிலையில், 10 முதல் 12 மணி நேரத்தில் முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 



இவ்விரு மாணவர்கள் இந்த சாதனையை நிகழ்த்தும் பட்சத்தில் இவர்களது சாதனை எலைட் வோல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கர்ட்ஸ் அகாடமி, இந்தியன் ரெக்கர்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ரெக்கார்ட் செட்டர் மற்றும் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் ஆய்வுக்கு வழங்கப்படும். சிறுவர்களின் இந்த முயற்சி வெற்றி பெற கோவை மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...