உதகை தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்கள்

நீலகிரி: உதகையில் நடைபெற இருக்கும் 122-வது மலர் கண்காட்சிக்காக, அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

நீலகிரி: உதகையில் நடைபெற இருக்கும் 122-வது மலர் கண்காட்சிக்காக, அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.



நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும் சுற்றுலா பயணிகளைக் கவர தோட்டக்கலைத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக உலக புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

அதன்படி, வரும் மே மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் 122-வது மலர் கண்காட்சி நடை பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, பூங்காவில் பல்வேறு பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மேரி கோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, பெட்டூனியா, சால்வியா, டேலியா உள்ளிட்ட 90 வகையான மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்கள், கண்காட்சியைக் காண வரும் சுற்றுலா பயணிகளின் மனதைக் கொள்ளையடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...