மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு வீட்டில் சேர்த்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை

கோவை : மனநலம் பாதிக்கப்பட்டு கோவை சாலைகளில் சுற்றித்திருந்த 40 வயது வாலிபர் ஒருவரை ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் மீட்டு அவரது வீட்டில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : மனநலம் பாதிக்கப்பட்டு கோவை சாலைகளில் சுற்றித்திருந்த 40 வயது வாலிபர் ஒருவரை ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் மீட்டு அவரது வீட்டில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று அந்தோணி (40) என்ற ஒரு வாலிபர் கழுத்தில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்ட நிலையில் சுற்றிக் கொண்டிருந்தார். இரும்பு கம்பிகள் கழுத்தில் காயங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் குறித்து கோவை ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. 



தகவலின் பேரில் அங்கு சென்ற அந்த தன்னார்வ அமைப்பினர், அந்தோணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவரது வீடு புலியகுளம் பகுதில் இருப்பதும் தெரியவந்தது. சிகிச்சைக்குப் பின்னர் அந்தோணியை அழைத்துச் சென்ற ஈர நெஞ்சம் அறக்கட்டளை அவரது வீட்டில் ஒப்படைத்தனர். 



நீண்ட நாட்களுக்குப் பின் சகோதரரைக் கண்ட அந்தோணியின் தம்பி ஜோசப் தன்னார்வ அமைப்பினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...