ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஈரோட்டில் பா.ஜ.க பிரமுகர் கைது

ஈரோடு : ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ.க வழக்கறிஞரை ஈரோடு ரயில்வே போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஈரோடு : ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ.க வழக்கறிஞரை ஈரோடு ரயில்வே போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கைலேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினருடன் கேரளா மாநிலம் வர்தாவில் இருந்து சென்னை செல்வதற்காக சென்னை திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணித்துள்ளார்.



அப்போது, இவர்களுடன் வந்த 9 வயது சிறுமிக்கு அதே பெட்டியில் பயணித்த நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையறிந்த உறவினர்கள் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஈரோடு ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தவுடன் அங்கு தயாராக இருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் சென்னை பெசன்ட்நகரை சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பதும் சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் கீழ் வழக்கறிஞரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர் கடந்த 2006-ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...