கோவை, நீலகிரியில் சாலை பாதுகாப்பு வார விழா தொடக்கம்

கோவை: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இன்று கோவை மற்றும் நீலகிரியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தொடங்கி வைத்தார்.



கோவை: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இன்று கோவை மற்றும் நீலகிரியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி, இந்தாண்டு நீலகிரி மாவட்டம் உதகையில் சாலைப்பாதுகாப்பு விழா தொடங்கியது. முதல் நாளான இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.



இந்த பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார். மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேரிங்கிராஸ் பகுதியைச் சென்றடைந்தது.



இதே போல், கோவையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் சாலை பாதுகாப்பு பேரணியை தொடங்கி வைத்தார். மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியானது அரசினர் பெண்கள் பலவகை தொழில்நுட்ப கல்லூரி, காந்திரபுரம் மாநகர பேருந்து நிலையம் வழியாக நேரு உள் விளையாட்டரங்கத்தினை அடைந்தது. இந்த பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஓட்டுநர்கள், ஊர்காவல் படையினர், வாகன விற்பனை முகவர்கள், புகை பரிசோதனை மைய நிறுவன உரிமையாளர்கள், தன்னார்வலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து காவல்துறை மற்றும் காவல்துறையின் சார்பில் 29-வது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.



பேரணியில் கலந்து கொண்டவர்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகளை ஓட்டவேண்டும், தலைக் கவசம் உயிர்க்கவசம், மது அருந்தி வாகனம் ஓட்டாதீர், மித வேகம் மிக நன்று ஆகிய விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பேரணியானது, அமராவதி சிலை, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, பூக்கடை வீதி வழியாக சென்று தாராபுரம் காவல்நிலையம் சென்றடைந்தது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...