பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டம் : கோவையைச் சேர்ந்த முன்னாள் கைதியின் செல்போன் உரையாடலால் பரபரப்பு

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த முன்னாள் கைதி ரபீக் என்பவர், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாகப் பேசியிருக்கும் செல்போன் உரையாடல் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த முன்னாள் கைதி ரபீக் என்பவர், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாகப் பேசியிருக்கும் செல்போன் உரையாடல் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வெளியே வந்தவர் ரபீக். 52 வயதான இவர், பழைய கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த கார் வியாபாரியான பிரகாஷ் ஒருவரிடம் தொழில் நிமித்தமாக ரபீக் பேசும் ஆடியோ ஓன்று வெளியாகி உள்ளது. அதில், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறுவது போல பதிவாகியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வாட்ஸ் அப் மூலம் வேகமாகப் பரவி வருகின்றது.

மேலும், அந்த ஆடியோவில் கூறியிருப்பதாவது :- கொம்பு முளைத்தவன் வந்தாலும், என்னை ஒன்றும் பண்ண முடியாது. நாங்கள் "பிரதமர் மோடியையே கொலை செய்ய வேண்டும்" என்று முடிவு செய்துள்ளோம். நான் அத்வானிக்கு குண்டு வைத்தவன். 160 வண்டி உடைத்த வழக்குகள் உள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம், தடா போன்ற எல்லா வழக்குகளையும் பார்த்துள்ளோம், எனக் கூறியுள்ளார்.

இந்த வாட்ஸ் அப் ஆடியோ குறித்து கோவை மாநகர போலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக விசாரிக்க கோவை மாநகர போலிசார் ரபீக்கை தேடிய போது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா நேரடியாக இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், பிரதமர் குறித்து பேசியது தொடர்பாக கோவையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் ரபீக்கிடம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, ரபீக்கிற்கு சம்மன் அனுப்பவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...