காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்தால் தற்கொலை செய்வோம்: அய்யாக்கண்ணு

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்தினால் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும், இல்லையெனில், தற்கொலை செய்வோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்தினால் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும், இல்லையெனில், தற்கொலை செய்வோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "10 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும், ஆனைமலை நல்லாறு திட்டத்தை 9-ம் தேதிக்குள் நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். கெயில் எரிவாயு மற்றும் உயர்மின் கோபுரங்களை விவசாய நிலங்கள் வழியாக அமைக்கக் கூடாது. விவசாயிகள் அனுமதியின்றி விவசாய நிலங்களில் நுழையக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்காவிடில், டெல்லியில் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம். முடியாவிடில் தற்கொலை செய்வோம்," என்றார்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...