கோவை வ.உ.சி பூங்காவில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் திடீர் ஆய்வு

கோவை : கோவை வ.உ.சி. பூங்காவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

கோவை : கோவை வ.உ.சி. பூங்காவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் திடீரென ஆய்வு மேற்கொண்டார். 



கோவை மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங்,  சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, வ.உ.சி உயிரியல் பூங்காவில் நடைபெறவுள்ள மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். வ.உ.சி. உயிரியல் பூங்காவில் மான்கள், மயில்கள், குரங்குகள் காப்பிடங்களையும், பாம்புகள் பண்ணையினையும் அவர் பார்வையிட்டார். பின்னர், உயிரியல் பூங்காவில் பொதுமக்கள், குழந்தைகளுக்கான ரயில் நிலையத்தைப் பார்வையிட்டு, பொதுமக்களுடன் ரயிலில் பயணித்து ஆய்வு செய்தார். 



பின்னர், கோவை மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில், மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், சாலைகள், மின்விளக்குகள், குடிதண்ணீர், பாதாள சாக்கடைகள் மேலாண்மைப் பணிகள், துப்புரவு தூய்மைப் பணிகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடைபெற்று வரும் பணிகள் பற்றியும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் அதிகாரி ஹர்மந்தர் சிங் கலந்தாய்வு மேற்கொண்டார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...