பயணச்சீட்டுப் பரிசோகர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி கௌரவிப்பு

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு எதிராக எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட பயணச்சீட்டுப் பரிசோகர்களுக்கு தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு எதிராக எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட பயணச்சீட்டுப் பரிசோகர்களுக்கு தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், அனைத்து ரயில்களிலும், ரயில்நிலையங்களிலும், அடிக்கடி பயணச்சீட்டு பரிசோதனைகள் நடத்தி வருகிறது. கடந்த (2017-18) ஆண்டில், சேலம் கோட்ட முதுநிலை வணிகமேலாளர் ஏ. விஜுவின், சேலம் கோட்ட வணிக மேலாளர் கே. மாது இருவரது மேற்பார்வையில், பயணச்சீட்டு பரிசோதகர்கள் குழு 38,205 பரிசோதனைகள் நடத்தி, 2,11,712 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 8,95,52,095/- அபராதம் மற்றும் பயணச்சீட்டு தொகையாக வசூலித்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 4 சதவீதம் அதிகமாகும். 

ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரை பயணச்சீட்டு இல்லாத பயணம் செய்தோர் எண்ணிக்கை (Nos.) 46,662. அபராதம் மற்றும் பயணச்சீட்டு தொகை: ரூ. 1,91,33,011.00 வசூலிக்கப்பட்டுள்ளது.

சரியான பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தோர் எண்ணிக்கை (Nos.) 1,57,852 (குறைந்த வகுப்பு பயணச்சீட்டு வைத்துக் கொண்டு, உயர் வகுப்பில் பயணிப்பது, பயணச்சீட்டில் உள்ள ரயில்நிலையத்தை விட வேறு ரயில்நிலையங்களுக்குப் பயணிப்பது போன்றவை) அபராதம் மற்றும் பயணச்சீட்டு தொகை: ரூ .6,74,53,829. முன்பதிவு செய்யாமல் சுமைகளை எடுத்துச் சென்று அல்லது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான சுமைகளை எடுத்துச் சென்றவர்கள் எண்ணிக்கை (Nos.) 7,198, அபராதம் மற்றும் பயணச்சீட்டு தொகை: ரூ. 29,65,255 ஆகும். 

இவ்வாறு சிறப்பாக பணியாற்றிய சேலம் கோட்ட பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஆர், சந்திரசேகரன், பி.எஸ்.பத்மகுமார், பி. செல்வகுமார், ஆர், சந்திரன், எஸ். பாரதி ஆகியோருக்கு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு. சுப்பாராவ் ஒவ்வொருவருக்கும், பாராட்டுச் சான்றிதழுடன், ரூ. 1000 ரொக்கப்பரிசையும் வழங்கினார்," என கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...