நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு : விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : புதிதாக அமைய உள்ள நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் இருக்கையை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் : புதிதாக அமைய உள்ள நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் இருக்கையை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் மற்றும் பல்லடம் பகுதிகளுக்குட்பட்ட விவசாய நிலங்கள் வழியாக கோவை– கரூர் நெடுஞ்சாலை திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியைக் கண்டித்தும், காங்கேயம் மற்றும் பல்லடம் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி இருக்கை அருகே எழுந்து வந்து முற்றுகையிட்டனர். 

இதனால், குறை தீர்க்கும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை மனுவாக அளிக்க வலியுறுத்தியதை அடுத்து விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் நிலம் துண்டாடப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் இழப்பீடாக விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில் இருந்து 5 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...