முறைகேடான ஆதாயத்திற்காகவே கள் இறக்குமதிக்கு தடை : நல்லசாமி குற்றச்சாட்டு

கோவை : முறைகேடான ஆதாயம் பெறுவதற்காக கொடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே, தமிழகத்தில் கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை : முறைகேடான ஆதாயம் பெறுவதற்காக கொடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே, தமிழகத்தில் கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "சீமை சாராய அதிபர்களின் நெருக்கடி காரணமாகவும், முறைகேடான ஆதாயம் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே கள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. கள் உணவு, மது, போதை பொருள் எனப் புரிதல் இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு முன்பு உணவின் ஒரு பகுதியாக இருக்கக் கூடிய பொருளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கள் இறக்குவதும், குடிப்பதும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை என அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது. இது உலகளாவிய நடைமுறையும் ஆகும். 

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான பீகார், கர்நாடகா, கேரள மாநிலங்களில் கள் இறக்க அனுமதி உள்ளபோது, தமிழகத்தில் கள் இறக்க அனுமதி மறுப்பது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். வரும் காலங்களில் மென் பானங்கள் மூலமே அதிக வருவாய் ஈட்ட முடியும் என்ற நிலை மாறி வருகிறது. தமிழகத்தில் ஒன்பது நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் மதுபான வகைகளை கண்காணித்து கட்டுப்படுத்தி விற்பனை செய்யும் போதும், கள் கலப்படத்தை கட்டுப்படுத்த அண்டை மாநிலங்களால் முடியும் போதும், தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடியாது எனக் கூறுவது அரசின் கையில் ஆகாத தனம். 

மேலும், கள் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 75,000 மரம் ஏறும் தொழிலாளர்கள், தற்போது அண்டை மாநிலமான கேரளாவிற்கு சென்றுவிட்டனர். பதனியில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையின் விலை ரூ. 200 ஆக உள்ளது. நீரா பானம் மூலம் சர்க்கரை உற்பத்தி செய்யும் போது ரூ. 500 வரை பெற முடியும் என்பதால் விவசாயிகள் பலன் பெறுவர். தமிழகம் முழுவதும் தற்போது விவசாயிகள் கள் இறக்கி வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும் போலீசார், பானைகளை உடைப்பது, பொய் வழக்கு போடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுவரை 30,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை சட்ட ரீதியாக சந்திப்போம்," எனக் கூறினார். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...