அழிந்து வரும் பழங்கால பாறை ஓவியங்கள் : பாதுகாக்கக் கோரிக்கை

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அழிந்து வரும் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதனின் வாழ்வியல் பதிவுகளை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அழிந்து வரும் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதனின் வாழ்வியல் பதிவுகளை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொன்மையான ஓவியங்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறை ஒதுக்குகளில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் பரவலாக அனைத்து மாநிலங்களிலும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் மத்தியபிரதேச மலைக் குன்றுகளில் காணப்படுகின்றன. அதுபோலவே, தமிழகத்தில் பாறை ஓவியங்கள் பெரும்பாலும், குறிஞ்சி மற்றும் முல்லை நிலப் பகுதிகளில் உள்ள மலைகளில் புதிய கற்காலம், பெருங்கற்காலம் மற்றும் வரலாற்றுக்காலம் என்ற காலக்கணக்கில் ஓவியங்கள் காணக்கிடக்கிறது.

 

இதுபோன்ற பாறை ஓவியங்கள் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பகுதிக்குட்பட்ட பாலமலையில் காணப்படும் நெடும் பாறையில் அமைந்துள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள ஆபத்தான அடர்ந்த மலைக்காட்டின் நடுவே உள்ள குகை ஒன்றின் வெளிப்புற பாறையில் சுமார் 63 ஓவியங்கள் உள்ளன. இங்கு, உருவங்கள் குழுவாகவும், தனியாகவும் வரையப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களில், யானைகள், மான்கள், புலி, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளும் இவற்றை வேட்டையாட செல்லும் மனிதர்களையும், சித்தரிக்கும் ஓவியங்கள் பாறைகளில் வரையப்பட்டுள்ளன. 

இந்த ஓவியங்கள் அடி மட்டத்திலிருந்து சுமார் 12 அடி உயரத்தில் பாறையில் நீளமாக வரையப்பட்டுள்ளன. இங்குள்ள பெரும்பாலான ஓவியங்கள், அதன் தொன்மை அறியாமல் இப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சி மற்றும் வன கோவில்களுக்கு வரும் சிலரால் அழிக்கப்பட்டு வருகின்றன. தீ பிடித்தது போல கரிய நிறத்திலும், பாறையின் கீழ் பகுதியில் 5 அடிக்கு மஞ்சள் நிறத்தில், சுண்ணாம்பு பூசியும் இந்த ஓவியங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் அனைத்தும் அசாதாரண நிலையிலே காணப்படுகிறது. இதை வரைந்த ஓவியர்கள் உருவங்களை மிக சிறப்பாகவும், துல்லியமாகவும் அடுத்தவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள ஏதுவாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியுள்ளனர். 

இங்குள்ள ஓவியங்கள் அக்கால மனிதர்கள் இயற்கையோடும், அது சார்ந்த வன உயிரினங்களோடும் ஒன்றிணைந்து வாழ்ந்ததை சித்தரிக்கின்றன. பல்வேறு காலநிலை மாற்றத்திற்கான விலங்குகளின் செயல்பாடுகளை உணர்த்துவதாகவும் உள்ளன. இந்த ஓவியங்கள் கோட்டோவியமாகவும், உருவங்களுக்குள் வெள்ளை நிற வண்ணம் முழுவதும் நிரப்பிய நிலையில் காணப்படுகின்றது. பழங்காலத்தில் மனிதன் விலங்குகளோடு எப்படி ஒன்றிப்போய் தனது வாழ்கையை வாழ்ந்தார்கள் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓவியங்களாக வரைந்து காட்டப்பட்டுள்ளன. இந்த வரலாற்று பொக்கிஷங்களை தமிழக அரசும், இந்திய தொல்லியல் துறையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...