நீலகிரியில் அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று நடை பெற்ற அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று நடை பெற்ற அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.



பெங்களூரு அல்ட்ரா மாரத்தான் அகாடமி சார்பில் தேசிய அளவிலான அல்ட்ரா மாரத்தான் ஓட்டம் உதகை ஆனந்தகிரி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் 15 கி.மீ, 30 கி.மீ, 60 கி.மீ தூரம் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.



இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கோவா, அரியானா மற்றும் உத்திரபிரதேசம் உட்பட 10 மாநிலங்களிலிருந்து ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கலந்து கொண்டார்.



ஆனந்தகிரி பகுதியிலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டமானது கோடப்பமந்து, தேயிலை பூங்கா, கெந்தொரை, கக்குச்சி, இடுஹட்டி, பரலட்டி, தும்மனட்டி, பட்டர்கம்பை என்ற கிராம புற பகுதிகளில் நடை பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...