உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகளுக்கான பூமி பூஜை விழா

கோவை: ஆத்துப்பாலம் முதல் ஒப்பணக்கார வீதி வரை ரூ. 216 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள உயர் மட்ட மேம்பாலப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி கரும்புக்கடை சந்திப்பில் இன்று நடைபெற்றது.

கோவை: ஆத்துப்பாலம் முதல் ஒப்பணக்கார வீதி வரை ரூ. 216 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள உயர் மட்ட மேம்பாலப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி கரும்புக்கடை சந்திப்பில் இன்று நடைபெற்றது.

கோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, நகரின் முக்கியமான சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் உக்கடம்-ஆத்துப்பாலம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.216 கோடி செலவில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொண்டாமுத்தூரில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி அடிக்கல் நாட்டிவைத்து பணிகளை தொடங்கிவைத்தார்.



ஆத்துப்பாலம் டோல்கேட் அருகேயுள்ள கரும்புக்கடை பகுதியில் தொடங்கும் இந்த பாலத்தில் 4 வழிப்பாதைகள் அமைக்கப்பட உள்ளது. 1.25 கி.மீ நீளத்துக்கு கட்டப்பட உள்ள இந்த பாலத்தின் ஒரு பகுதி, பேரூர்-பைபாஸ் சாலையை அடையும் வகையில் கட்டமைக்கப்பட உள்ளது. மற்றொரு பகுதி, நேராக என்.எச்.ரோடு (நாஸ் தியேட்டர்) வரை சென்று முடிகிறது.

ரூ. 216 கோடி

தரையில் இருந்து 5.30 மீட்டர் உயரத்தில் அமையவிருக்கும் இந்த பாலத்திற்காக நிலம் கையகப்படுத்தவும், அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்தவும் ரூ.88.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.127.09 கோடி பாலம் கட்ட செலவிடப்படுகிறது. மொத்தம் 55 தாங்கு தூண்கள் அமைக்கப்பட உள்ளன.

கட்டுமானப் பணிகளுக்காக, உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வழித்தடத்தில் இடதுபுறம் 20 அடி நிலம் கையகப்படுத்தப்படுகிறது. நிலம் வழங்க, சம்பந்தப்பட்ட நபர்கள், நெடுஞ்சாலை துறையிடம் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இப்பாலத்தின், ஒரு பகுதி உக்கடம்-பேரூர் சாலையில் இறங்குவதால், உக்கடம் காவல் நிலையம் எதிரே உள்ள பழக்கடை, கோழிக்கடை மற்றும் சாலையோர குடியிருப்புகள் அகற்றப்பட்டதோடு, அவற்றிற்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பாலம் பயன்பாட்டிற்கு வரும்போது, பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலைகளிலிருந்து கோவை நோக்கி வருபவர்களுக்கும், கோவையிலிருந்து செல்பவர்களுக்கும் போக்குவரத்து நெரிசலின்றி சென்று வர உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று கரும்புக்கடை சந்திப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி நாடாளமன்ற உறுப்பினர் மகேந்திரன், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி, சட்டமன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...