நீலகிரி காய்கறி கண்காட்சி: தினசரி அங்காடிகளுக்கு போட்டிகள்

நீலகிரி: காய்கறி கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தினசரி அங்காடிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீலகிரி: காய்கறி கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தினசரி அங்காடிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

மாவட்டத்தில் கோடை விழா சிறப்பாக கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடை விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் வரும் மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் காய்கறி கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

இதில், காய்கறிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக அரங்குகள் அமைத்து போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு தினங்களிலும் மாவட்டத்தில் கோத்தகிரி, உதகை, கூடலூர் மற்றும் குன்னூர் வட்டாரங்களில் உள்ள உழவர் சந்தைகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் தினசரி காய்கறி அங்காடிகளை சுற்றியுள்ள இடங்கள் தூய்மையாக வைத்திருப்பவர்களுக்கும், விற்பனைக்கு தயாராக உள்ள காய்கறிகளை நல்ல முறையில் காட்சிப்படுத்துவோருக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கண்காட்சி நடைபெறும் இரு தினங்களிலும் அனைத்து உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி அங்காடிகளை அதிகாரிகள் பார்வையிடுவார்கள். எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விற்பனையாளர்கள் தங்கள் அங்காடிகளை தூய்மையாக பராமரித்து பரிசுகளை வென்றிட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...