தீ விபத்தின் போது 'செல்பி' எடுக்காதீர்கள்., அது உயிருக்கே ஆபத்தாக முடியும்..! - தீயணைப்புத் துறை

கோவை: தீ விபத்தின் போது சிலிண்டர் போன்றவை வெடிக்கக் கூடும் என்பதால் வேடிக்கை பார்க்கும் மக்கள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் 'செல்பி' எடுக்க வேண்டாம் என்றும் கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பி. பிரதிப்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை: தீ விபத்தின் போது சிலிண்டர் போன்றவை வெடிக்கக் கூடும் என்பதால் வேடிக்கை பார்க்கும் மக்கள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் 'செல்பி' எடுக்க வேண்டாம் என்றும் கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பி. பிரதிப்குமார் தெரிவித்துள்ளார்.

செல்பி

செல்பி மோகம் அதிகரித்துவிட்ட நிலையில் எங்கும் செல்பி, எதிலும் செல்பி என்ற நிலை உருவாகியுள்ளது. சுற்றுலா தளங்களில் ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுக்க முயன்று பலர் உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. அதே போல் சாலை விபத்து, தீ விபத்து ஏற்படும் பகுதிகளிலும் சிலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது வேதனையான ஒன்று.

இது குறித்து கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பிரதிப்குமார் கூறுகையில், "தீ விபத்தின் போது அதன் அருகில் செல்வதோ அல்லது செல்பி எடுக்க முயல்வதோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிலிண்டர் அல்லது வேறு ஏதாவது வெடிபொருள் இருந்தால் அது வெடிக்க வாய்ப்புள்ளது. அப்போது வேடிக்கை பார்ப்பவர்களின் உயிருக்கே அது ஆபத்தாக முடியும்." என்றார்.

தீ விபத்தின் போது அதனை அணைக்க முதற்கட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாதம் தோறும் தீயணைப்பு வீரர்களால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது? என்பது குறித்தும், மக்கள் அந்த சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளிப்பார்கள்.

இது குறித்து பிரதிப்குமார் கூறுகையில், "மாதம் தோறும் பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் அல்லது கிராமப்புறங்களில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளார்கள் என்றே கூறலாம். போதுவாக கோடை கலங்களில் தீ விபத்து குறித்து அதிக அழைப்புகள் வரும் ஆனால், கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்தாண்டு அழைப்புகள் குறைவே. தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்." என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...