அடிதடியில் முடிவடைந்த கூட்டுறவு சங்க தேர்தல்: திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: எதிர்க்கட்சிகள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருப்பூர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: எதிர்க்கட்சிகள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருப்பூர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் குமரன் சாலையில் செயல்பட்டுவரும் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்று தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட அ.தி.மு.க-வை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.அப்போது, தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் மேயர் செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, போலீசார் அ.தி.மு.க-வினருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், தி.மு.க-வினரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க-வினர் போலீசாரின் தடையை மீறி வங்கி வளாகத்திற்குள் நுழைந்தனர் இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வினருக்கு சாதகமாக செயல்பட்ட போலீசாரைக் கண்ணடித்து கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர் இதனிடையே இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு உருவானதை அடுத்து தி.மு.க., கம்யூன்ஸ்ட், உள்ளிட்ட கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வேட்பு மனு தேதியை ஒத்திவைத்து தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...