அமைச்சரின் நிர்பந்தத்தால் செட்டாப் பாக்ஸ் வழங்குவது இழுத்தடிப்பு: கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு

கோவை: கோவை மாவட்டத்திற்கு அமைச்சரின் நிர்பந்தத்தால் செட்டாப் பாக்ஸ்களை வழங்குவது இழுத்தடிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை மாவட்டத்திற்கு அமைச்சரின் நிர்பந்தத்தால் செட்டாப் பாக்ஸ்களை வழங்குவது இழுத்தடிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் மூலம் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கப்பட்டு வரும் செட்டாப் பாக்ஸ்கள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக கோவை ஆபரேட்டர்களுக்கு வழங்கவில்லை. இது குறித்து கோவை மற்றும் சென்னை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் முறையான பதில் அளிக்கப்படவில்லை. மேலும், செட்டாப் பாக்ஸ் வாங்க தலா ரூ. 30 வீதம் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட 2,50,000 விண்ணப்பங்களுக்கான தொகை ஆபரேட்டர்களால் அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனில் செலுத்தப்பட்டது. 

செட்டாப் பாக்ஸ்களுக்கான முழுத்தொகையான ரூ.180 வீதம் அனைத்து செட்டாப் பாக்ஸிற்கான தொகையை செலுத்தியுள்ளோம். இருப்பினும், கோவைக்கு மட்டும் செட்டாப் பாக்ஸ்களை வழங்காமல் அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் மறுத்து வருகிறது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 'அட்சயா' என்ற பெயரில் பந்தய சாலையில் தனியார் கேபிள் டிவி தொடங்கி, அதன்மூலம் செட்டாப் பாகஸ்கள் விற்க திட்டமிட்டுள்ளார். தனியார் செட்டாப் பாக்ஸ்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசு செட்டாப் பாக்ஸுகள் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை, அமைச்சர் தடுக்க நினைப்பது துரோகம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...