100-ஆம் ஆண்டில் விடைபெற்றது நல்லஆயன் பள்ளி

கோவை: கடந்த 99 ஆண்டுகளாக இயங்கி வந்த நல்லஆயன் உயர்நிலைப்பள்ளி, மாணவர் சேர்க்கை குறைவால் பள்ளி கல்வித்துறையால் மூடப்படுகிறது.


கோவை: கடந்த 99 ஆண்டுகளாக இயங்கி வந்த நல்லஆயன் உயர்நிலைப்பள்ளி, மாணவர் சேர்க்கை குறைவால் பள்ளி கல்வித்துறையால் மூடப்படுகிறது.

உக்கடத்தை அடுத்துள்ள கோட்டைமேடு பகுதியில் கடந்த 1917-ம் ஆண்டு துவக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டு, 1927-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர், 1947-ம் ஆண்டு மீண்டும் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நல்லஆயன் உயர்நிலைப் பள்ளி, கல்விச் சேவையைத் தொடர்ந்து வந்தது. 



அரசின் உதவி பெற்று சுமார் 99 ஆண்டுகளாக இயங்கி வந்த இப்பள்ளி உக்கடம், டவுன்ஹால், சுங்கம் போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை சமூகத்தில் தலை சிறந்தவர்களாக உருவாக்கி பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வந்தது. சென்ற கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால், இப்பள்ளி மூடப்படுவதாகப் பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, தனது 100-ம் ஆண்டில் கல்விச் சேவையிலிருந்து விடைபெற்றது நல்லஆயன் பள்ளி.

இதனையடுத்து, இப்பள்ளியில் 1994-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பாக மாற்று பள்ளிக்கு செல்லும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்குப் பிரிவு உபச்சார விழா, கோவை வெரைட்டி ஹால் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் மாணவர்கள் 60 பேர் மற்றும் 22 ஆசிரியர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு நல்லஆயன் பள்ளி பற்றிய தங்களின் நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு பிரியாவிடை பெற்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...