சேலம் மாவட்ட ஆட்சியர் மீது காலணி வீசிய முதியவர்

சேலம் : சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மீது ஒருவர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் : சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மீது ஒருவர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் குறைதீர்ப்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆர்.பாஜிபக்ரே பொதுமக்களின் குறைகளுக்கான மனுக்களைப் பெற்று வந்தார். அப்போது, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த ஒருவர் திடீரென காலில் அணிந்திருந்த காலணியைக் கழற்றி மாவட்ட ஆட்சியர் தலைமீது ஓங்கி வீசினார். இதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி சட்டென்று விலகினார். இதனால், அருகில் இருந்தவர் மீது காலணி பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் அவரைப் பிடித்து தாக்கினர். 



சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி, அவரின் கன்னத்தில் அறைந்தார். பிறகு, அவரை அடித்து இழுத்துக்கொண்டு சேலம் டவுன் ஸ்டேஷனுக்கு குண்டுக்கட்டாக இழுத்து சென்றார். இதனால், சற்றுநேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு அவர் பற்றி விசாரிக்கும்போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு காவலர்கள் அவர் உண்மையில் மனநோய் பாதிக்கப்பட்டவரா, இல்லை வேறு ஏதாவது காரணத்துக்காக இப்படி செய்துள்ளாரா என்பது பற்றி தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதுபற்றி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கேட்டதற்கு, ''அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருடைய சொந்த ஊர் ராசிபுரம், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடமும் ஆசீர்வாதம் செய்வதாக காலணியை கழற்றியிருக்கிறார். பிறகு கைது பண்ணி நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்போது நீதிபதிக்கு முத்தம் கொடுக்கப் போயிருக்கிறார். இப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்'' என்றார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...