குட்கா தொழிற்சாலைக்கு எதிராக போராடிய தி.மு.க-வினர் கைது: கோவையில் போலீஸ் குவிப்பு

கோவை: தடைசெய்யப்பட்ட குட்கா தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக நேற்று தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக வந்த தகவலையடுத்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை: தடைசெய்யப்பட்ட குட்கா தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக நேற்று தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக வந்த தகவலையடுத்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் டெல்லியை சேர்ந்த அமித்ஜெயின் என்பவருக்குச் சொந்தமான குடோன் உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, பான்பராக் போன்றவை உற்பத்தி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குட்கா தொழிற்சாலை செயல்படுவது குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையின் போது குட்கா பொருட்கள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 டன் மூலப்பொருட்களும் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 79 பண்டல் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஆலையின் மேலாளர் ரகுராமன், வடமாநில தொழிலாளர்கள் அஜய், ராம்தேவ், சோஜிராம் ஆகிய நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர், டெல்லியில் உள்ள ஆலையின் உரிமையாளர் அமித் ஜெயினை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குட்கா விவகாரத்திற்கு எதிராக கோவை மாவட்ட தி.மு.க-வினர் அந்த தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கண்ணம்பாளையம் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சண்முகம், சுரேஷ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.

குட்கா தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய தி.மு.க-வினரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று அக்கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, மாநகரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவல் ஆணையர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகம் போன்ற இடங்களில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவி நிலவி வருகிறது.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...