கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க-வினர் கைது

கோவை: குட்கா தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக நேற்று தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க-வினரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: குட்கா தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக நேற்று தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க-வினரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் குட்கா, பான்மசாலா, பான்பராக் போன்றவை உற்பத்தி செய்யும் நிறுவனம் இயங்கி வந்தது. இது குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். நால்வரை கைது செய்தனர்.

இந்த நிலையில், குட்கா தொழிற்சாலைக்கு எதிராக தொழிற்சாலை முன்பு தி.மு.க தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் ஈடுபட்ட தி.மு.க-வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கண்ணம்பாளையம் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சண்முகம், சுரேஷ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.

தி.மு.க-வினரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று அக்கட்சியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.



இதே போல், சூலூர், சின்னியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், தி.மு.க தொண்டர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.



தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " குட்கா தொழிற்சாலை உரிமையாளர் அமித் ஜெயினுக்கு கண்ணம்பாளையம் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அப்பட்டமான பொய். இந்த விவகாரத்தில் காவல் கண்காணிப்பாளருக்கும் தொடர்பு உள்ளது என்பதை எங்களால் நிருபிக்க முடியும். எனவே இதனை முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்." என்றார்.



மாவட்டம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...