அடுத்தடுத்த இருநாட்களில் 3 கைதிகள் உயிரிழப்பு: கோவை மத்திய சிறை வார்டன்கள் பணியிடை நீக்கம்

கோவை: கோவை மத்திய சிறைச்சாலையில் கடந்த இருநாட்களில் 3 கைதிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரு சிறை வார்டன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை: கோவை மத்திய சிறைச்சாலையில் கடந்த இருநாட்களில் 3 கைதிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரு சிறை வார்டன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா வழக்கு ஒன்றில் கைதாகி சொக்கநாதன் என்பவர் கடந்த 16-ம் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென்று, வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சொக்கநாதன் உயிரிழந்தார். அதேபோல, பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி, கோவை மத்திய சிறையில் இருந்த மற்றொரு கைதியான சீனிவாசன், திடீரென சிறையில் இருந்த மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் புற்று நோயிற்கு சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதியான உதயகுமார் என்பவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். நேற்று முன்தினம் சிறையில் இருந்த இரு கைதிகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், தற்போது, மேலும் ஒரு கைதி இறந்திருப்பது அனைவரிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர் சிறை மரணங்களால், கோவை மாவட்ட சிறைச்சாலையின் மருத்துவ சிகிச்சை முறை பற்றியும் சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும், சிறைவாசிகளுக்கு மனரீதியான ஆலோசனைகளை வழங்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல பணியின் போது இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள், சிறைவாசிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதனிடையே, பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்ட தலைமை வார்டன் திருநாவுக்கரசு மற்றும் வார்டன் பழனிவேலு ஆகிய இரண்டு சிறை வார்டன்களையும் கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...