மேட்டுப்பாளையத்தில் பெய்த கன மழையால் தென்னை, வாழை மரங்கள் சேதம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை காரணமாக தென்னை மற்றும் வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்து சேதமடைந்தன.

கோவை : மேட்டுப்பாளையத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை காரணமாக தென்னை மற்றும் வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்து சேதமடைந்தன. 

மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தினசரி மாலை நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், நேற்றிரவு பத்து மணிக்கு மேல் வழக்கம் போல் மழை பெய்ய தொடங்கியது. சற்று நேரத்தில் மழையுடன் பலத்த காற்றும் வீசியது. 

சற்று நேரத்தில் மழையின் அளவு குறைந்த போதிலும் காற்றின் வேகம் அதிகரித்தது. இடி மின்னலுடன் சூறாவளி போல் வீசிய காற்றின் வேகத்தில் சிக்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள கெம்மாரம்பாளையம், கண்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானதோடு நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் வேரோடு சரிந்து மண்ணில் விழுந்தன. 

மேலும், தோட்டங்களில் இருந்த மாமரங்கள், பப்பாளி மரங்கள், சோளப்பயிர்கள் என அனைத்தும் சாய்ந்தன. தோட்டத்து வீடுகளில் இருந்த கூரைகள் பீய்ந்து ஓடுகள் காற்றில் பறந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாரான வாழை மரங்களும், ஏழாண்டுகளுக்கும் மேல் வளர்ந்து காய் பிடிக்கும் பக்குவத்திற்கு வந்த உயரமான தென்னை மரங்களும் மண்ணில் கிடப்பதை இன்று காலை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தள்ளனர். 

இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த தங்களது விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கினால் மட்டுமே இனி விவசாயத்தை தொடர இயலும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...