குட்கா விவகாரம் : தி.மு.க தொண்டர்கள் மீது வழக்கு என்பது பழி வாங்கும் செயல் - கோவையில் ஸ்டாலின் பேச்சு

கோவை : குட்கா விவகாரத்தில் தி.மு.க-வினர் மீது புனையப்பட்ட வழக்குகளைக் கண்டித்தும் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


கோவை : குட்கா விவகாரத்தில் தி.மு.க-வினர் மீது புனையப்பட்ட வழக்குகளைக் கண்டித்தும் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 



கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் பின்னர் குட்கா ஆலை தொழிலாளர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.  



இந்த நிலையில், குட்கா ஆலை தொடர்பான விசாரணையை வெளிப்படைத் தன்மையுடன் நடத்தக் கோரி, ஆலையின் முன்பாக தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். 



இந்த சம்பவத்தில், காவல் துறையினர் பழிவாங்கும் நோக்குடன் பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும், குட்கா விவகாரத்தில் ஆளும் கட்சியினரின் தலையீடு இருப்பதாகவும் தி.மு.க-வினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில், இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்டாலின் பேசுகையில், "குட்கா விவகாரத்தில் நியாயமான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க தொண்டர்கள் மீது பழி போடும் விதமாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரவோடு-இரவாக கைது செய்து சிறையில் அடைத்தால் நாங்கள் அஞ்சி விட மாட்டோம். ஆளும் கட்சியினர் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எங்கள் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். தி.மு.க ஆட்சி அமையும் போது இதற்கு பதிலளித்தே தீர வேண்டும்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு 'குட்கா பாஸ்கர்' என்ற பெயர் கிடைத்துள்ளது. காவல் துறை தலைமை பொறுப்பில் இருக்கும் ராஜேந்திரன் மற்றும் தற்போது ஓய்வு பெற்ற ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 லட்சம் மாமூலாக கொடுக்கப்பட்டது தற்போது கைப்பற்றப்பட்ட டைரியில் உள்ளது. ஆதாரம் இல்லாமல் எதுவும் பேச மாட்டேன். இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் அதிகாரி ஒருவரை நியமித்தது. ஆனால், அவரை தமிழக அரசு மாற்றி விட்டது.



விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் மூர்த்தி அந்த மாவட்டத்தில் பணியாற்றி வருபவர். இந்த விவகாரத்தில் இருவருக்கும் என்ன தொடர்பு உள்ளது? என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. 

தி.மு.க ஆட்சி அமையும் போது இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் இதற்கு பதில் கூறியே ஆக வேண்டும். " இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...