ரூ. 11 லட்சம் செலவு செய்தும் பிரச்சனை தீரவில்லை : 70-வது வார்டு மக்கள் வேதனை

கோவை : கோவை மாநகராட்சி அதிகாரிகளின் அரை குறை வேலையால் சாக்கடை அடைப்பு பிரச்சனைக்கு தீர்வில்லாமல்,வார்டு எண் 70-ல் வசித்து வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை : கோவை மாநகராட்சி அதிகாரிகளின் அரை குறை வேலையால் சாக்கடை அடைப்பு பிரச்சனைக்கு தீர்வில்லாமல்,வார்டு எண் 70-ல் வசித்து வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.



 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட புலியகுளம் பிரதான சாலை, ஆறுமுகம் சந்து, ஆறுமுகம் வீதி, சின்ன மருதாசல வீதி ஆகிய பகுதிகளில் நிலவிவரும் சாக்கடை அடைப்பு பிரச்சனையை சரி செய்ய மாநகராட்சியால் ரூ. 11 லட்சம் செலவு செய்யப்பட்டு கழிவு நீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டது.

வாய்க்காலை சீர் செய்யாமல் வடிகால் அமைக்கப்பட்டதால் இப்பகுதியில் சாக்கடை அடைப்பு அதிகமானதோடு, பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றது. இதனால், பணம் வீணானதோடு சாக்கடை அடைப்பும் சரியாகவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 



இது தொடர்பாக, அப்பகுதியில் வசிக்கும் சி.ஐ.டி.யு மாவட்ட குழு உறுப்பினர் மாரிமுத்து கூறுகையில், "பல போராட்ட முயற்சிக்கு பிறகே சாக்கடை வடிகால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. பணி நடைபெறும் போதே கழிவு நீர் வாய்க்காலை முறையாக சுத்தம் செய்து தருமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாம். ஆனால், அதை பொருட்படுத்தாமல், பிரதான வடிகால் பாதையை, கழிவுநீர் வாய்க்காலை விட அதிகமான உயரத்தில் அமைத்துவிட்டனர். இதனால், கழிவுநீர் வடிந்து செல்ல முடியாமல் சாக்கடையாக தேங்கி நிற்கிறது. மழை நேரங்களில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. கொசுத் தொல்லை, துர்நாற்றம் என சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறோம்." என்றார்.



புலியகுளம் பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வடிகால் 3 அடி உயரத்தில் ஆபத்தான வேகத்தடையாக தற்போது காட்சியளிக்கிறது.



"பரபரப்பான சாலையில் இந்த வேகத்தடை அமைந்திருப்பதால், இப்பகுதியில் சாலை விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம், வேகத்தடையை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, நடந்து சென்ற முதியவர் மீது மோதியதால் முதியவர் பரிதாபமாக பலியானார். வாகனங்கள் எளிதாக ஏறி இறங்கும் வகையில் வேகத்தடையின் உயரம் சீராக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்." என்கிறார் அப்பகுதியில் வசித்து வரும் சி.பி.எம் ஆட்டோ சங்க செயலாளர் நாகராஜன்.

பொதுமக்களுக்கான திட்டங்களை அவர்களே போராடிப்பெற்றுக் கொள்ளும் நிலையே நிர்வாகத் தோல்வி தான். அதையும் அரைகுறையாகச் செய்து மக்களை சிரமப்படுத்துவது மாநகராட்சி நிர்வாகத்தின் திறனற்ற நிலையை அப்பட்டமாக காட்டுகிறது.

மீண்டும் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கும் முன், சாக்கடை வடிகாலை சீர்செய்து, சாலை விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...