கோவை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை - மகன் பலி

கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சின்னியம்பாளையம் அடுத்து நீலாம்பூர் பகுதியில் வசித்து வருபவர் திரிலோக சுந்தர். வங்கி ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர், இன்று காலை 6.30 மணியளவில் சூலூர் குரும்பம்பாளையம் பகுதி அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தூக்கக் கலக்கம் காரணமாக சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது அவர் ஓட்டி வந்த கார் வேகமாக மோதியது. 

இதில், காரை ஓட்டி வந்த திரிலோக சுந்தர் (42), அவரது மகன் டேனியல் (7) சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், காரில் பயணம் செய்த அவரது மனைவி எழிலரசி மற்றும் அவரது மகள் ஷிவானி (9) ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...