நீட் தேர்வு எழுதுவோருக்கான கட்டுப்பாடுகளும், வழிமுறைகளும்..!

நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் தேர்வினை எழுதும் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகளும், வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் தேர்வினை எழுதும் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகளும், வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. 



இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்த இருக்கிறது. இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நாளை (மே 6) நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையிலும், தேர்வு மையங்களை மாற்ற சி.பி.எஸ்.இ., மற்றும் உச்சநீதிமன்றமும் மறுப்பு தெரிவித்து விட்டன. 

இதனையடுத்து, வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் மற்றும் ரூ. 1,000 பயணப்படி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. நீட் தேர்வுக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்கள் இன்றே புறப்பட்டு செல்கின்றனர். அவர்களை அழைத்துச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. 



தேர்வுக்கான கட்டுப்பாடுகள் :-

முன்னதாக, இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கான நுழைவுச்சீட்டிலேயே உடைக்கட்டுப்பாடு, தேர்வு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, உடைக்கட்டுப்பாடுகள் என்னென்ன..? என்பது குறித்து அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- வெளிர் நிறத்திலான அரைக்கை ஆடைகள் (ஹாப் ஸ்லீவ்ஸ்) அணிந்து வரவேண்டும். அதில், பெரிய பொத்தான், பேட்ஜ், பூ போன்றவை இடம்பெறக்கூடாது. சல்வார் மற்றும் பேண்ட் அணிந்து வரவேண்டும். குறைந்த உயரத்திலான செருப்புகள் மட்டுமே அணியவேண்டும். மூடப்பட்ட நிலையில் இருக்கும் காலணிகளுக்கு அனுமதி கிடையாது. 

மேலும், தொலைத்தொடர்பு சாதனங்களான செல்போன், புளூடூத், ஹெட்செட், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த் பேண்ட் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், ஜாமெட்ரி மற்றும் பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பை, கால்குலேட்டர், பேனா, அளவுகோல்(ஸ்கேல்), பரீட்சை அட்டை, பென் டிரைவ்ஸ், ரப்பர், எலக்ட்ரானிக் பேனா, ஸ்கேனர் ஆகியவை கொண்டு செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், மணிபர்ஸ், கைப்பை, பெல்ட், தொப்பி, கைக்கெடிகாரம், கேமரா, உலோக பொருட்கள், மூடப்பட்ட நிலையில் இருக்கும் சாப்பிடும் உணவு பொருட்கள், வாட்டர் பாட்டில் ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் :-

 

மருத்துவப் படிப்புக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட்தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10மணி முதல் ஒருமணி வரை நடைபெறும். தேர்வெழுதும் மாணவர்கள் ஏ, பி என இரு பிரிவினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஏ பிரிவில் உள்ளவர்கள் காலை ஏழரை மணியில் இருந்து எட்டரை மணிக்குள் தேர்வு மையத்துக்குச் சென்று தாங்கள் வந்திருப்பதைத் தெரிவிக்க வேண்டும். பி பிரிவில் உள்ளவர்கள் காலை எட்டரை மணியில் இருந்து ஒன்பதரை மணிக்குள் தேர்வு மையத்துக்குச் சென்று தாங்கள் வந்திருப்பதைத் தெரிவிக்க வேண்டும். ஒன்பதரை மணிக்குப் பின் வருபவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தடைசெய்யப்பட்ட பொருட்களைத் தேர்வு மையத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும். தேர்வுக்கான அனுமதிச் சீட்டையும். ஒரு பாஸ்போர்ட் அளவு வண்ணப்படத்தையும் தேர்வு மையத்துக்கு எடுத்துச் செல்லலாம்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...