தமிழக மாணவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய எர்ணாகுளம் ஜவுளி வியாபாரி

நீட் தேர்வு எழுதுவதற்காக அண்டை மாநிலமான கேரளாவிற்கு சென்று மொழி பிரச்சனை, தங்குமிடம் இல்லாமல் தவித்து வந்த தமிழக மாணவர்களுக்கு எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.


நீட் தேர்வு எழுதுவதற்காக அண்டை மாநிலமான கேரளாவிற்கு சென்று மொழி பிரச்சனை, தங்குமிடம் இல்லாமல் தவித்து வந்த தமிழக மாணவர்களுக்கு எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். 



நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மாணவர்கள் சென்று தேர்வு எழுத உள்ளனர். தற்போது, வெளி மாநிலம் சென்றுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பலவிதங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை விடுமுறை காரணமாக, ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவுகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டதால், இடம் கிடைக்காமல் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அத்துடன், அரசின் தாமதமான பயணப்படிகளின் அறிவிப்பால், அதனைப் பெற முடியாமலும் வெளி மாநிலத்தில் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் தவித்து வருகின்றனர். மேலும், மொழி பிரச்சனை ஒருபுறம் இருக்க, தேர்வுக்காக ஏற்கனவே வெளிமாநிலங்களுக்குச் சென்றவர்களால்,  தங்குமிடம் இன்றி பெரும்பாலானோர் சிரமப்பட்டு வருகின்றனர். 



இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் தேர்வு எழுதச் சென்ற மாணவர்களுக்கு, அங்கு ஜவுளிக் கடை வைத்து நடத்தி வரும் திருமலை உதவி செய்து வருகிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் 20 வருடங்களாகக் கடை வைத்து உள்ளேன். தற்போது, நீட் தேர்வு எழுத வரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் எங்கு செல்ல வேண்டும், எந்தப் பேருந்தில் ஏறுவது, தங்குவது எப்படி என்று புரியாமல் தவித்து வருகின்றனர்.



தற்போது வரை 150-க்கும் மேற்பட்டவர்கள் வந்து இங்கு வந்து இருப்பார்கள். நான் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். ஏனெனில், எனது மகளும் திருநெல்வேலியில் நீட் தேர்வு எழுத உள்ளார். அவரும் சிரமப்பட்டு தான் அங்கு சென்றார். அதனால் நான் இங்கு வருபவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்," என்றார்

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...