5 ஆண்டுகளுக்கு மேலாகப் பூட்டியே கிடக்கும் கிராமப்புற நூலகங்கள் : பகுத்தறிவைக் கொடுக்கும் இடம், பாதையில்லாமல் கிடக்கும் அவலம்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளிகளுக்கு எதிரே கட்டப்பட்டுள்ள நூலகங்கள் பூட்டியே கிடப்பதால், சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருவது மாணவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளிகளுக்கு எதிரே கட்டப்பட்டுள்ள நூலகங்கள் பூட்டியே கிடப்பதால், சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருவது மாணவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 

மேட்டுப்பாளையத்தைப் பொறுத்தவரையில் 75 சதவீதம் கிராமங்களை கொண்ட பகுதி. கிராமப்புற மாணவர்கள் கல்வி பயிலவும், விலை உயர்ந்த புத்தகங்களை எளிதில் பெறவும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையத்தின் பல்வேறு ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் சுமார் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலான நூலக கட்டிடங்கள் கட்டப்பட்டன. குறிப்பாக, கிராமங்களுக்கு நடுவேயும், அரசு பள்ளிகளுக்கு அருகாமையிலும் இந்த நூலகங்கள் அமைக்கப்பட்டன. 

கல்வி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த நூலகங்கள் திறக்கப்பட்டன. இதற்காக, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பதிப்பகங்களில் இருந்து ஏழை மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில், அரிய புத்தகங்களும் வாங்கப்பட்டன. மாணவர்களுக்கு கல்வி ஊக்கம் அளிக்கும் வகையில், செயல்படுத்தப்பட்ட இந்த நூலகங்கள் கடந்த 5 ஆண்டுகளாக மூடியே கிடக்கின்றன.

கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் சாலைவேம்பு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டி கொடுக்கப்பட்ட நூலகம் புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்ட நிலையிலும், திறக்கப்படாமலேயே இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளிக்கு முன்பாக அமைந்துள்ள இந்த நூலகத்தின் கட்டிடம், தற்போது ஊராட்சியின் கழிவு பொருட்களின் அறைகளாக மாற்றப்பட்டுள்ளன. தெருவிளக்குகளில் இருந்து கழற்றப்பட்ட விளக்குகள், உடைந்த மேசை, நாற்காலிகள் மற்றும் தேவையற்ற ஊராட்சி நிர்வாகத்தின் ஆவணங்களை வைக்கும் அறையாக மாறியுள்ளது. 

மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் சிதறி கிடப்பதுடன், பராமரிப்பு இன்றி கிடப்பதால் அவை குப்பைகளாகவும், எலிகளுக்கு உணவாகவும் இருந்து வருகிறது. மேலும், மருதூர் ஊராட்சிக்குட்பட்ட கனுவாய்ப்பாளையம் ஊராட்சி பள்ளிக்கு எதிரே கட்டப்பட்ட நூலகமும் இதுவரை திறக்கப்படாமல் குப்பைகளைக் கொட்டி வைக்கும் குப்பை தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், எப்போதும் திறந்தே இருக்கும் இந்தக் கட்டிடத்தில் போதை ஆசாமிகள் அரங்கேற்றங்களும் அத்துமீறிக் கொண்டே இருக்கிறது.

இந்த நூலகக் கட்டிடத்தில் இரவில் பாய் விரித்துப் படுத்து தூங்கும் சமூகவிரோதிகள் மது குடித்து விட்டு மதுபாட்டில்களையும், போதை வஸ்துக்களையும் போட்டு வைக்கும் கூடமாகவும் மாற்றப்பட்டுள்ளது. தங்கள் பகுதிக்கு அமைத்த இந்த நூலகம் இதுவரை பயன்பாட்டிற்கே வராததால், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கத்து கிராமத்துக்கு செல்ல வேண்டியுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், பூட்டியே கிடக்கும் இந்த நூலகங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...