கோடை சுற்றுலா : முதுமலை புலிகள் காப்பகத்தின் சிறப்புகள்


நீலகிரி : கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை மக்கள் அதிகமாக சுற்றுலா செல்லும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை வாரந்தோறும் கட்டுரையாக வெளியிட்டு வருகிறோம். அதன்படி, முதுமலை புலிகள் காப்பகத்தின்  சிறப்புகளை இன்று காணலாம்.     



முதுமலை 

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய வனப்பகுதியாக விளங்கி வருவது முதுமலை புலிகள் காப்பகம். உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் முதுமலைக்கும் செல்கிறார்கள். உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாகச் சென்றால் 36 கி.மீ தூரத்தில் முதுமலை பகுதியை சென்றடையலாம்.  அதேபோல் கூடலூர் வழியாகச் சென்றால் 75 கி.மீ தூரத்தில் முதுமலையை சென்றடையலாம்.



கடந்த 1936-ம் ஆண்டு 25 சதுர கி.மீ. பரப்பளவில் முதுமலை வன விலங்குகள் சரணாலயம் தொடங்கப்பட்டது. இங்கு யானைகள்,  புலிகள், சிறுத்தைகள், மான்கள் மற்றும் காட்டெருமைகள் என பல்வேறு வன விலங்குகள் காணப்படுகின்றன. இது மட்டுமின்றி தேக்கு, ஈட்டி போன்ற விலை உயர்ந்த மரங்களும் உள்ளன. 25 சதுர கி.மீ பரப்பளவில் தொடங்கப்பட்ட இந்த சரணாலயம்  தற்போது 320 கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.

இங்கு யானைகள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி யானைகளின் புகலிடமாகவும் கருதப்படுகிறது. இந்த வன விலங்குகள் சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு முதுமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டது.

முதுமலை காட்டில் தாயைப் பிரிந்து வரும் யானைகளை பராமரித்து வளர்க்கவும், காட்டுக்குள் இருந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளைக் கட்டுப்படுத்த வளர்ப்பு யானைகள் முகாமும் செயல்பட்டு வருகிறது. 

இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கிரி யானை உட்பட 23 வளர்ப்பு யானைகள் உள்ளன. தினமும் மாலை 5 மணிக்கு தெப்பகாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதுமட்டுமல்லாமல் வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளை காணும் வகையில், வனத்துறை சார்பில் யானை மற்றும் வாகன சவாரி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.



கட்டண விவரம்

பெரியவர்களுக்கு ரூ. 30-ம் , சிறியவர் ரூ. 20-ம், அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ. 5-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே போல் வெளி நாட்டவர்களில்  பெரியவர்களுக்கு ரூ. 300-ம், சிறியவர்களுக்கு ரூ. 200ம் வசூலிக்கப்படுகிறது.

வாகன சவாரி ஒரு நபருக்கு ரூ. 340-ம், வெளி நாட்டவர்க்கு ரூ. 2,500-ம் வசூலிக்கப்படுகிறது. ஒரு முறை யானை சவாரி மேற்கொள்ள ரூ.1,120-ம், வெளி நாட்டவர்க்கு ரூ.11,600-ம் வசூலிக்கப்படுகிறது.

புகைப்பட கருவிக்கு ரூ. 50-ம், விடியோ காமிரா-வுக்கு ரூ. 300-ம், வெளி நாட்டவர்க்கு ரூ. 3000-ம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண விவரம் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதியின் அடிப்படையிலானது.

முதுமலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வனத்துறை சார்பில் தங்கும் விடுதிகளும்  செயல்பட்டு வருகிறது.  இங்கு தங்குவதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். www.mudumalaitigerreserve.com என்ற இணைய தள முகவரி மூலமாக பதிவு  செய்து கொள்ளலாம். "கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்" என்பதே இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் விடுக்கும் ஒரே வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...