பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டது : தனியரசு கடும் தாக்கு

கோவை : நீட் விவகாரத்தில் தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரைப் பறிக்கும் பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டதாக கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை : நீட் விவகாரத்தில் தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரைப் பறிக்கும் பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டதாக கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை செல்வதற்காக இன்று கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- 

நீட் கட்டாயம் என்று கூறியதே தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்ததுவிட்டது. இந்த நிலையில், நீட் தேர்வு மையம் அமைப்பதில் மத்திய அரசிற்கு நெருக்கடி கொடுக்காமல், மாநில அரசு துணையாக இருந்துள்ளது. வெளி மாநிலங்களில் தேர்வு மையம் கிடைத்த மாணவர்கள் உளவியல் ரீதியாகவும், மொழி மற்றும் சூழ்நிலை ரீதியாகவும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். 

எர்ணாகுளத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் தந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரைப் பறிக்கும் பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து வருகிறது. இந்த பிரச்சனையில் மாநில அரசின் இயலாமையை வன்மையாக கண்டிக்கிறோம். 

போராட்டம் 

ஏழு கோடி தமிழர்களும் சாதி, மதம், அரசியல் கடந்து காவிரியை பெறுவதிலும், நீட்டை ஒழிப்பதிலும் போராட வேண்டும். இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பா.ஜ.க., கேள்விக் குறியாக்கியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசுக்கு, மாநில அரசு துணை போவதாக சந்தேகம் உள்ளது. மாநில உரிமைகளுக்காக தமிழக முதலமைச்சர் அறவழிப் போராட்டம் நடத்தியிருந்தால், தேசம் தழுவிய கவனத்தை ஈர்த்து இருக்கலாம். இனியாவது மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.

தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பிரதமரை சந்திப்பது நிராகரிக்கப்பட்டால், அவர்கள் இருவரும் மத்திய அரசைக் கண்டித்து அற வழியில் போராட வேண்டும். மேலும், சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களையும், காவிரிக்கு எதிரான அனைத்துக் கட்சி தீர்மானத்தையும் மதிக்காத மத்திய அரசைக் கண்டித்து வலிமையான போராட்டத்தை மாநில அரசு முன்னெடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...