ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய்யுடன் வந்த மூதாட்டி: விபரம் தெரியாமல் வந்ததாக விளக்கம்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மூதாட்டி ஒருவர் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மூதாட்டி ஒருவர் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஆலாந்துறை போயர் காலணி பகுதியை சேர்ந்தவர் வீரமணி என்கின்ற வீரம்மாள்(65). இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு அளிக்க வந்திருந்தார். வழக்கமாக மனு அளிக்க வருபவர்களிடம் சோதனை நடத்தும் காவலர்கள் மூதாட்டியின் கையில் இருந்த பையை சோதனை செய்த போது அவரிடம் அரை லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது.



தொடர்ந்து, அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்த போலீசார் விசாரித்தனர். அப்போது, தனக்குச் சொந்தமான வீட்டை தங்கை ஏமாற்றி விட்டதால் மனு அளிக்க வந்திருப்பதாக மூதாட்டி தெரிவித்தார். மேலும், குனியமுத்தூரில் வசிக்கும் தனது மகள் கேட்டு கொண்டதின் காரணமாக, அவரிடம் கொடுக்க மண்ணெண்ணெய் வாங்கி வந்ததாகக் கூறிய மூதாட்டி, அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு வரக் கூடாது என்று தனக்கு விபரம் தெரியாது என பரிதாபமாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பெண் காவலர்கள் உதவியுடன் மனு அளிக்கச் சென்றவர், மனு அளித்த பின்னர் பாட்டிலை திரும்ப வாங்கிச் சென்றார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...