​கோவை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை இடியுடன் மழைக்கு வாய்ப்பு

​கோவை: ​கோவை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.





கோவை: 


கோவை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த வாரம் தொடங்கியது. ஆனால், பல இடங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் எதிர்பாராத அளவுக்கு இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இந்நிலையில், வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், நாமக்கல், கரூர், சத்தியமங்கலம், கோபி, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. கோவையை பொறுத்தவரையில், லேசான மழை முதல் கனமழை வரை பெய்யக் கூடும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஏற்கனவே, தமிழகத்தில் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...