தெற்கு ஆசிய தடகள போட்டியில் சாதனை படைத்த கோவை வீரருக்கு உற்சாக வரவேற்பு

கோவை: தெற்கு ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த வீரருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை: தெற்கு ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த வீரருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இளையோருக்கான தடகள போட்டிகள் கடந்த 4,5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இலங்கை சுகதாசா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பூடான் உள்ளிட்ட 8 நாடுகளைச் 300-க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்றனர். ஓட்டபந்தயம், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள், 3 வீராங்கனைகள் என எட்டு பேர் பங்கேற்றனர்.

இதில், கோவை அச்சீவர்ஸ் அத்தலெடிக் கிளப்பைச் சேர்ந்த மாணவர் கமல்ராஜ், மும்முறை தாண்டுதல் (டிரிபிள் ஜம்ப்) போட்டியில் கலந்து கொண்டு 16.05 மீட்டர் நீளம் தாண்டி, தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு 15.74 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது. இந்த நிலையில், போட்டி முடிந்து விமானம் மூலம் கோவை திரும்பிய காமராஜுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :- ஜூனியர் தடகள போட்டிகள் வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் நான் பங்கேற்க உள்ளேன். அந்தப் போட்டியிலும் தங்கம் வெல்வதே தனது லட்சியம். தற்போது, ஆசிய அளவில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் ரேங்கிங்கில் முதல் இடத்திலும், உலக அளவில் 7-வது இடத்தில் இருக்கிறேன். மேலும், இட அளவில் முன்னேறக் கடின பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனத் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...