அனுமதி இல்லாமல் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறையின் முன் அனுமதி இல்லாமல் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக்கூடாது என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையின் முன் அனுமதி இல்லாமல் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக்கூடாது என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பள்ளிக் கல்வித்துறையின் முன் அனுமதி இல்லாமல் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக்கூடாது. சுற்றுலாவின் காலஅளவு எக்காரணம் கொண்டும் 4 நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அதுமட்டுமின்றி ஆறு, ஏரி, குளம், குட்டை, அருவி, கடல் போன்ற நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்லக் கூடாது. மேலும். சுற்றுலா லாப நோக்குடன் இருக்கக் கூடாது. கல்வி சார்ந்தே இருக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை பெறும் மாணவர்களை மருத்துவரின் அனுமதியின்றி அழைத்துச் செல்லக்கூடாது. சுற்றுலா செல்லும் போது பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மற்றும் பத்து மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை வீதம் பாதுகாப்பாளராகச் செல்ல வேண்டும், என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...