கோவை - பொள்ளாச்சி வரையிலான பயணிகள் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு

கோவை: கோவை - பொள்ளாச்சி வரையில் இயக்கப்பட்டு வரும் பயணிகள் சிறப்பு ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை - பொள்ளாச்சி வரையில் இயக்கப்பட்டு வரும் பயணிகள் சிறப்பு ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் எண் : 06083/06084 கோவை - பொள்ளாச்சி - கோவை பயணிகள் சிறப்பு ரயில்களின் சேவை இன்று (மே 10) முதல் நவம்பர் 21-ம் தேதி வரை மேலும் சுமார் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த காலகட்டத்தில், கோவை - பொள்ளாச்சி செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06083) கோவையில் இருந்து அதிகாலை 05.40 மணிக்குப் புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு 07.05 மணிக்கு சென்றடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு.

கோவை - பொள்ளாச்சி செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06085) கோவையில் இருந்து மாலை 06.30 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு இரவு 8 மணிக்கு சென்றடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு.

பொள்ளாச்சி - கோவை செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06084) பொள்ளாச்சியில் இருந்து அதிகாலை 07.30 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு காலை 08.45 மணிக்கு வந்தடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு.

பொள்ளாச்சி - கோவை செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06086) பொள்ளாச்சியில் இருந்து இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு இரவு 09.45 மணிக்கு வந்தடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு, இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...