குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி ஜீவ சமாதி அடையும் போராட்டம்: பெண் கைது

திருப்பூர்: அத்திக்கடவு- அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி நேற்று அவினாசியில் ஜீவ சமாதி அடையும் போராட்டம் நடத்திய பெண் சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: அத்திக்கடவு- அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி நேற்று அவினாசியில் ஜீவ சமாதி அடையும் போராட்டம் நடத்திய பெண் சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா(39). இவர் அவினாசி புதிய பேருந்து நிலையம் முன்பு அத்திக்கடவு-அவினாசி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி நேற்று மாலை உயிருடன் சமாதி அடையும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், "அத்திக்கடவு- அவினாசி கூட்டு குடிநீர் திட்டமானது கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியத் திட்டம். இன்று இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வறட்சியால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மூன்று தலைமுறைகளாக இத்திட்டம் வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதாக அரசு வாக்குறுதி கொடுத்தது. ஆனால், இன்று வரை அடிக்கல் கூட நாட்டவில்லை. இத்திட்டம் தொடர்பாக அ.தி.மு.க., அரசு வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வருகிறது. ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு உடனே பணிகள் நடந்து வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு அத்தியாவசியத் தேவையான இத்திட்டத்தை நிறைவேற்றித்தர அரசு தாமதிக்கிறது. ஆகவே, அத்தியாவசியத் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி உயிருடன் சமாதி அடையும் போராட்டத்தில் ஈடுபட்டேன்." என்றார்.

இதையடுத்து, அப்பகுதியில் படுத்தபடி போராட்டத்தை நர்மதா தொடர்ந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அவினாசி போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, முன் அனுமதி இன்றி இது போன்ற போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். அப்போது அவர் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவேன் என்றார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரம் காவலில் வைத்த பின்னர் அவரை விடுவித்தனர்.



Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...