குட்கா ஆலை விவகாரம்: தளபதி முருகேசனுக்கு 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

கோவை: குட்கா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட தளபதி முருகேசனை வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.



கோவை: குட்கா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட தளபதி முருகேசனை வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம், கண்ணம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த குட்கா ஆலை வழக்கு திடீர் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்படாத நிலையில், குட்கா ஆலை விவகாரத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில், தி.மு.க.,வை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் ஊராட்சித் தலைவர் தளபதி முருகேசன் என்பவரும் ஒருவர். இவர் குட்கா ஆலை செயல்பட உதவியதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார்.

இந்த நிலையில், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த முருகேசன், கடந்த மூன்று நாட்களாக சூலூர் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடவில்லை. அவரை பற்றி குட்கா ஆலையின் மேலாளர் ரகுராம் அளித்த தகவலின் அடிப்படையில், முருகேசனை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட முருகேசனை போலீசார் இன்று சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர் மீது சிகரட் மற்றும் புகையிலை தடுப்பு சட்டத்தில் 2 பிரிவுகள் மற்றும் ஐ.பி.சி-யில் 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி வேடியப்பன், முருகேசனை வரும் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து முருகேசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...