குடிநீர் கட்டணம் செலுத்தாத மாநகராட்சி நிர்வாகம்: குடிநீர் வடிகால் சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: குடிநீர் கட்டணம் செலுத்தாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து குடிநீர் வடிகால் சங்க ஊழியர்கள் பாரதி பார்க் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: குடிநீர் கட்டணம் செலுத்தாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து குடிநீர் வடிகால் சங்க ஊழியர்கள் பாரதி பார்க் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை உடனடியாக அமல் படுத்த வேண்டும், குடிநீர் கட்டணமாக மாநகராட்சியால் செலுத்தப்பட வேண்டிய ரூ. 210 கோடி உடனடியாக வசூல் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., குடிநீர் வடிகால் சங்கத்தினர் பாரதி பார்க் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு இதுவரை ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், குடிநீர் வடிகால் வாரியம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ளதால் வாரியத்தின் சொந்த நிதியில் இருந்து நடைமுறைப்படுத்திக்கொள்ள அரசாணை வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணமாக உள்ளாட்சி அமைப்புகள் இதுவரை ரூ. 500 கோடி பாக்கி வைத்துள்ளது. இதில், கோவை மாநகராட்சி மட்டும் ரூ. 210 கோடி பாக்கி வைத்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் கோவை மாநகராட்சி சுமார் ரூ. 250 கோடி வரிவசூல் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், உடனடியாக குடிநீர் வடிகால் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவை பாக்கிகளை வசூல் செய்ய வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளின் நிலுவை பாக்கிகளை விரைவில் வசூல் செய்து குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வேலைப்பளுவை உயர்த்தி ஆட்குறைப்பு செய்வதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.ஐ.டி.யு., தமிழ்நாடு வாட்டர் சப்ளை அண்டு ட்ரெயினேஜ் போர்டு வொர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உதவி தலைவர் பிரான்சிஸ், பொதுச்செயலாளர் ஆர்.சரவணன், பொருளாளர் கே.ஆர்.ராஜேந்திரன், சம்மேளன முன்னாள் தலைவர் பாலகுமார், உதவி செயலாளர் பெலிக்ஸ் மற்றும் குடிநீர் வடிகால் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...