பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்ற விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி கொடுத்த தகவலின்பேரில், பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை உயர்நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நிர்மலா தேவி தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அத்துடன் அவரது மனுவையும் தள்ளுபடி செய்தது. இதேபோல, முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை 18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...