கோவையில் எதிர்பார்த்ததை விட அதிகமாக கோடை மழை பெய்துள்ளது - வேளாண் பல்கலை.,

கோவை: கோவையில் கோடை மழை தற்போது வரை 268 மி.மீ வரை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் அணைகளின் நீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் கோடை மழை தற்போது வரை 268 மி.மீ வரை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் அணைகளின் நீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் அடுத்த இரண்டு நாட்களைப் பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

130 மி.மீ மழை எதிர்பார்த்த நிலையில், தற்போது வரை 268 மி.மீ மழை பெய்துள்ளது. மீண்டும் மழை பெய்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். வால்பாறை, நீலகிரி, மேட்டுப்பாளையம் போன்ற கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துள்ள மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

காலை நேரங்களில் 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகக்கூடும்.

கோவையில் சில இடங்களில் வெயில் அதிகமாகக் காணப்படும், பின்னர், அதே இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும் மாறி மாறி காணப்படும்." என்றார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...