களைகட்டியது 'நம்ம ஊரு சந்தை'

கோவை: பாரம்பரியத்துக்கு திரும்புவதோடு, உடல் ஆரோக்கியத்தை பாதிக்காத இயற்கை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'நம்ம ஊரு சந்தை', வடகோவை மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்று வருகின்றது.

கோவை: பாரம்பரியத்துக்கு திரும்புவதோடு, உடல் ஆரோக்கியத்தை பாதிக்காத இயற்கை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'நம்ம ஊரு சந்தை', வடகோவை மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்று வருகின்றது.

காலை 10 மணியிலிருந்தே கோவையைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், விவசாயிகளும் இந்த சந்தையை பார்வையிட்டு, செயற்கை உரங்கள் பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட விளைபொருட்களை ஆர்வத்தோடு வாங்கி செல்கின்றனர். இந்த சந்தை மாலை 5 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இயல்வாகை என்ற தன்னார்வ அமைப்பு கடந்த மாதம் முதல் கோவையில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து வருகின்றது. மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமையில் சந்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்ற வாரம் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றதால், இந்த மாதத்திற்கான சந்தை இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இதில், இயற்கை வழி விவசாய விளைபொருட்கள், தேன், சிறு தானிய தின்பண்டங்கள், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், மதிப்புக் கூட்டிய உணவுப் பொருட்கள், மர விளையாட்டு சாமான்கள் என, இயற்கை சார்ந்த பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.



இதுகுறித்து இயல் வாகை அமைப்பினர் கூறுகையில், "அதிவேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில், இயற்கை பாதையை தொலைத்துவிட்டு, வெகுதூரம் வந்து விட்டோம். உணவு பழக்கத்திலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன. அதன் விளைவு, நோய் பாதிப்புகள் பெருகிவருகிறது. எனவே, இதுபோன்ற சந்தைகள் இயற்கையை பாதுகாப்பதோடு ஆரோக்கியமான உணவு முறை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்." என்றனர்.



இந்த சந்தையில், இன்றைய சிறப்பு நிகழ்வாக பச்சை காய்கறிகளை சமைக்காமலே சுவையான உணவாக மாற்றுவது குறித்த இலவச பயிற்சியை படையல் சிவக்குமார் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் அளித்தார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...