மஞ்சூர் அருகே காட்டெருமை தாக்கி தேயிலை தொழிலாளி பலி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோடரி பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி பலியானார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோடரி பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி பலியானார்.

குந்தா தாலுகா மஞ்சூர் அருகே கோடரி என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான ஆலடா வேலி எனும் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் ராமலிங்கம் (60) என்பவர் இன்று காலை 8 மணியளவில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.



அப்போது தேயிலை தோட்டத்தில் இருந்த காட்டெருமை ராமலிங்கத்தை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராமலிங்கத்தை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமலிங்கம் சிகிச்சை பலனின்றி பலியானார். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...