மாணவியை தகாத வார்த்தையில் திட்டியதாக பாரதியார் பல்கலை., துணை தலைவர் மீது புகார்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் உளவியல் துணை தலைவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாக மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் உளவியல் துணை தலைவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாக மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை உளவியல் துணையில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஹரிதா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கி படிப்பை தொடர்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை மோசமானது. இதனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று விடுதி காப்பாளர் பிரேமாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பிரேமா மறுத்ததோடு, விடுதியைப் பூட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் உளவியல் துணை தலைவர் வேலாயுதம் ஆகியோர் ஹரிதாவை வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், மேஜை மீது நிற்க வைத்து தண்டித்தாகவும் தெரிகிறது. மேலும், துணை தலைவர் வேலாயுதம் ஹரிதாவை தகாத வார்த்தைகளில் பேசிய திட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, வேலாயுதம், பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக ஆளுநர், காவல்துணை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் ஹரிதா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது வடவள்ளி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில், முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

மாணவி ஹரிதா புகார் அளித்துள்ள விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ், பல்கலைக்கழக துணை வேந்தருக்கு லஞ்சம் பெற்று தந்த புகாரில், லஞ்ச ஒழிப்பு காவல் துணையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...