எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் : சி.ஐ.டி.யு., மாநாட்டில் தீர்மானம்

கோவை : கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை : கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  



சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சம்மேளன 8-வது மாநில மாநாடு கோவையில் மே 11-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை மூன்று. மூன்றாவது நாளான நேற்று நடைபெற்ற மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி, சி.ஐ.டி.யு., மாவட்ட (பொ) செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், பொது போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மாநாடு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும், அண்டை நாடுகளில் விற்பனை செய்வது போல குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும். சமீபத்தில் உயர்த்தியுள்ள எரிபொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா சென்னை பெருநகரத்தில் இயங்கும் ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ் கருவியுடன் பிரிண்டரும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து 82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தமிழக அரசு காலம் கடத்துகிறது. உடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...