துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி வழங்குவதில் முறைகேடு : தொழிலாளர் ஆணையருக்கு சம்மன்

நீலகிரி : நீலகிரி மாவட்ட நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி வழங்குவதில் முறைகேடு நடந்தது தொடர்பாக தொழிலாளர் ஆணையருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : நீலகிரி மாவட்ட நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி வழங்குவதில் முறைகேடு நடந்தது தொடர்பாக தொழிலாளர் ஆணையருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் எல். முருகன் கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தார். 



ஆய்வு நிறைவடைந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த எல். முருகன் நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் சலுகைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முறையாக சென்றடைகிறதா..? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தெரித்தார். 

தொடர்ந்து அவர் பேசியதாவது :- இந்த ஆய்வில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளில் பணியாற்றி வரும் 500-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ. 610 வழங்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர். 

ஆனால், அந்தத் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 250 முதல் ரூ. 300 வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனால், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்கள் மற்றும் துப்புரவு பணி ஒப்பந்ததாரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையருக்கு சம்மன் அனுப்பியுள்ளோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...