கர்நாடக தேர்தல் : 101 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை, 17 தொகுதிகளில் வெற்றி

பெங்களூர் : நாடே உற்று கவனித்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 101 தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகிறது.

பெங்களூர் : நாடே உற்று கவனித்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 101 தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகிறது. 

கடந்த 2013-ம் சட்ட மன்ற தேர்தலில், 40 தொகுதிகளில் மட்டுமே வென்ற பா.ஜ.க., இந்த முறை முன்னிலை வகித்து ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தனிப்பெரும்பான்மைக்கான 112 தொகுதிகளைக் கடந்து அக்கட்சி முன்னிலை வகித்து வருகிறது. 

தற்போது ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 50 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இது வரை 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகத்தில் மற்றொரு சக்தி வாய்ந்த இடத்தை மத சார்பற்ற ஜனதா தளம் பெற்றுள்ளது. அக்கட்சி 38 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இது வரை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

பதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளிலும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பின் தங்கியுள்ளார். ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் அவசியம் என்ற நிலையில், 101 தொகுதிகளில் பா.ஜ.க, முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற முடிவை எடுக்கும் திறனை 'மத சார்பற்ற ஜனதா தளம்' பெற்று, 'கிங்-மேக்கர்' என்ற இடத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...