மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை: மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கோவை: மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற இளம்பெண், கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியிலுள்ள தனியார் பஞ்சாலையில் தூய்மை பணி மேற்கொண்டு வருகிறார். மனநிலை சற்று பாதிக்கப்பட்ட அப்பெண்ணை அதே ஆலையில் பணியாளரான முனிராஜ் என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்று பலமுறை அவரை பலாத்காரம் செய்ததால், அந்தப் பெண் கருவுற்றுள்ளார். ஆனால், தான் கர்ப்பமானதை அறியாத அப்பெண் தொடர்ந்து ஆலையில் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பெண்ணிற்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அன்னூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, அவர் ஏழு மாதம் கருவுற்று இருப்பதை மருத்துவர் உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து, முனிராஜை கண்டறிந்து அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு சிலர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், இதற்கு முனிராஜின் தாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட ராஜலட்சுமி கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, அங்கிருந்த பெண் காவலர்கள் ராஜலட்சுமியை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னை பலவந்தப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கருவுறச் செய்த முனிராஜ் மீதும், புகார் அளிக்கச் சென்ற தன்னை தாக்கிய காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், முனிராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை காட்டிவிட்டு, தற்போது தன்னை ஏமாற்ற முயற்சி செய்வதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...