பராமரிப்பின்மையால் கால்நடைகளின் மேய்ச்சல் இடமாக காட்சியளிக்கும் மாநகராட்சி பூங்கா

கோவை: மத்திய மண்டலம் வார்டு எண் 68-க்கு உட்பட்ட வள்ளியம்மாள் வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா, முறையான பராமரிப்பின்மையால் செடிகள் நிறைந்து கால்நடைகளின் மேய்ச்சல் இடமாக மாறியுள்ளது.

கோவை: மத்திய மண்டலம் வார்டு எண் 68-க்கு உட்பட்ட வள்ளியம்மாள் வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா, முறையான பராமரிப்பின்மையால் செடிகள் நிறைந்து கால்நடைகளின் மேய்ச்சல் இடமாக மாறியுள்ளது.



கோவை மாநகரின் குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகள் விளையாடுவதற்காகவும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நடைபாதை கொண்ட பூங்காக்களை மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு மாநகராட்சியால் இவ்வாறு கட்டப்பட்ட பெரும்பாலான பூங்காக்களின் நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளது.



குறிப்பாக, இராமநாதபுரம் பகுதியை ஒட்டியுள்ள வள்ளியம்மாள் வீதியில் அமைந்துள்ள குழந்தைகள் விளையாட்டு பூங்கா, கால்நடைகளின் மேய்ச்சலுக்கும், பல்வேறு சமூகவிரோத செயல்களுக்கும் பயன்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



"பூங்கா இருந்த இடத்தில், முன்னதாக குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. அதைத் தடுத்து நிறுத்தவே, இரண்டு வருடங்களுக்கு முன் இந்தப் பூங்கா கட்டப்பட்டது. ஆனால், பெரும்பாலான நேரம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் விளையாட்டு உபகரணங்கள் திருடப்படுகின்றன. முறையான பராமரிப்பு இல்லாததால், மின்கம்பங்கள் சேதமாகியுள்ளன. இதனால், அவ்வப்போது பூங்காவிற்கு வந்து கொண்டிருந்த பொதுமக்களும் வருவதில்லை. இதைப் பயன்படுத்தி அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் துணையோடு சிலர் இந்தப் பூங்காவை மது கூடாரமாகவும், மாடு மேயும் இடமாகவும் மாற்றியுள்ளனர். இதனால், பூங்காவை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்" என்கிறார் ஒரு குடியிருப்புவாசி.



மது பாட்டில்கள் குவிந்து கிடக்கும் நடைபாதை, செடிகளால் மூடப்பட்ட செயற்கை நீரூற்று, சேதமான நாற்காலிகள், மின் கம்பிகள் அறுந்து தொங்கும் விளக்குக் கம்பங்கள், பூட்டப்பட்ட கழிவறை என குட்டிச்சுவராக மாற்றப்பட்டுள்ள இந்தப் பூங்கா, பராமரிப்பு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால், பாரதிநகர் வீதி, வள்ளியம்மாள் வீதி,பெருமாள் கோவில் சந்து ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளும், பொதுமக்களும் பயன்பெறுவர்.

பல லட்சம் செலவில் கட்டப்பட்டு, மாட்டுக் கொட்டகையாக மாறியுள்ள இந்தப் பூங்காவானது, மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட வேண்டும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...